திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நேய காவல் அறை பிரிவு!

திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நேய காவல் அறை பிரிவு!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டம், திருவெறும்பூர் காவல் நிலையத்தில் குழந்தை நேய காவல் அறை திறப்பு விழா நடைபெற்றது.

Advertisement

இதில் சிறப்பு காவல் துறை இயக்குனர் (சட்டம் & ஒழுங்கு) ராஜேஷ் தாஸ், திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் ஜெயராம், திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் முனைவர் Z. ஆனி விஜயா, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) செந்தில்குமார், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் (NCPCR) மருத்துவர் R.G.ஆனந்த், இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷின் (IJM) M.தேவசித்தம், தமிழக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆனைய முன்னாள் உறுப்பினர்(TNSCPCR) மோகன் மற்றும் திருச்சி குழந்தை நல குழும உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயாவால் தொடங்கி வைக்கப்பட்ட கேடயம் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் நேய காவல் அறையானது, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு குழந்தை மற்றும் பெண்கள் நேய அறைகள் மூன்று முக்கிய அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏதுவான சூழல், குழந்தை மற்றும் பெண்களுக்கு தேவையான உபகரணங்கள், மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளை கையாளும் விதம் குறித்து காவல் அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதில் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கான குழந்தை நேய காவல் அறை இன்று திறக்கப்பட்டது. மேலும் திருச்சி சரகத்தில் உள்ள ஐந்து மாவட்டத்திலும் தலா இரண்டு காவல் நிலையங்கள் வீதம் பத்து காவல் நிலையங்களில் குழந்தை நேய காவல் அறை திறந்துவைக்கப்பட்டது. மேலும் அக்காவல் நிலையங்களுக்கு தேவையான அனைத்து விளையாட்டு சாதனங்களும் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் (IJM) மூலம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் ஐந்து மாவட்டங்களில் இருந்து மிகவும் ஏழ்மையான மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றவழக்குகளில் பாதிக்கப்பட்ட பத்து குழந்தைகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் 10,000/- வீதம் கேடயம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட காவல் தலைமையக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன், திருவெறும்பூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் திருச்சி சரக காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் மறுவாழ்வுத்துறை உறுப்பினர் சினேகா, பரனபாசு பிரவீன் மற்றும் குழந்தைகள் என சுமார் 200 நபர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.