திருச்சி மாவட்டத்தில் நாளை (12.11.2022) தேசிய மக்கள் நீதிமன்றம்
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுத்தின்படியும், திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான கே.பாபு உத்தரவுப்படி நாளை (12.11.2022) தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் நடைபெற உள்ளது.
இதில் திருச்சி, மணப்பாறை, துறையூர், முசிறி, லால்குடி, ஸ்ரீரங்கம் ஆகிய நீதிமன்ற வளாகங்களில் மொத்தம் 21 அமர்வுகள் மூலம் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. இதில் சாலை விபத்து, இழப்பீடு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு, மின்சார பயன்பாடு, வீட்டு வரி, குடிநீர் வரி, ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு வழக்குகள், தொழிலாளர் நல இழப்பீடு வழக்குகள், கல்விக் கடன், வங்கி கடன் சம்பந்தமான வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இதில் வழக்காடிகள் நேரடியாக பங்கேற்று சமாதானமாகவும், விரைவாகவும் வழக்குகளை முடித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இழப்பீடு தொகை பிற பிரச்சனைகளை இரு தரப்பினர் சமாதானத்துடன் விரைவில் தீர்க்கவும் மக்கள் நீதிமன்றங்கள் வழிவகை செய்கிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO