திருச்சி ஊர்காவல்படைக்கு ஆட்கள் தேர்வு 113 பேர் பங்கேற்பு

திருச்சி ஊர்காவல்படைக்கு ஆட்கள் தேர்வு 113 பேர் பங்கேற்பு

திருச்சி மாநகரில் ஊர்காவல்படையை சேர்ந்த ஆளிநர்கள் முக்கிய நபர்கள் வருகையின் போது பாதுகாப்பு, போக்குவரத்தை சீர்செய்தல், இரவு ரோந்து போது காவலர்களுடன் சேர்ந்து பணியாற்றுதல் என பல்வேறு வகையில் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். திருச்சி மாநகரில் ஊர்காவல்படையினரின் வலுபடுத்தும் வகையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கப்பட்டது. இதில் 23 ஆண் மற்றும் 5 பெண் என மொத்தம் 28 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது.

இதற்காக திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மாநகர ஊர்காவல்படையில் சேர விரும்பும் தகுதியுடைய நபர்களுக்கான நேர்முக தேர்வு கூடுதல் காவல் துணையானையர் விக்னேஸ்வரன் தலைமையில் ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 28 காலிப் பணியிடங்களுக்கு 94 ஆண்களும், 19 பெண்கள் என மொத்தம் 113 பேர் கலந்து கொண்டனர். இந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு எடை, உயரம், சான்றிதழ்கள் சரிப்பார்க்கப்பட்டன. 

பத்தாம் வகுப்பு (S.S.L.C) தேர்ச்சி (அ) தோல்வி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 20 முதல் 45 வரை இருக்க வேண்டும். உயரம் ஆண்-165 செ.மீ, பெண் - 155 செ.மீ இருக்க வேண்டும். திருச்சி மாநகரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டவராக இருக்க கூடாது. எந்த ஒரு அரசியல் அமைப்பிலும் சம்மந்தப்பட்டவராக இருக்க கூடாது போன்ற கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO