பக்தர்களின்றி ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி

பக்தர்களின்றி ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இக்கோவிலில் நம்பெருமாள் யானை கஜேந்திரனுக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி எப்போதும் அம்மாமண்டபம் படித்துறையில் நடைபெறுவது வழக்கம்.

கோவிட் தொற்று இரண்டாவது அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதனால் ஶ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பக்தர்கள் இல்லாமல் நடைபெறுகிறது. ரிஷி ஒருவரின் சாபத்தினால் குளத்தில் சாபவிமோஷனத்திற்காக காத்திருந்த காந்தர்வ மன்னர், அக்குளத்தில் சாபத்திற்குள்ளான மன்னன் ஒருவன் யானையாக கஜேந்திரன் என்ற பெயரில் குளத்தில் உள்ள தாமரை மலர்களை பறித்து பெருமாளை வழிபட்டு வந்தான்.

இந்நிலையில் முதலையாய் வாழ்ந்து வந்த காந்தர்வன், குளத்தில் நீராட வந்த யானை கஜேந்திரன் காலை பிடித்தது, உயிரை காப்பாற்ற போராடிய கஜேந்திர யானை ரங்கா, ரங்கா என மரண ஓலமிட்டது. தனது பக்தனை காப்பாற்ற தனது சக்கரத்தை முதலைமீது விட்டார், இதனால் காந்தர்வன் சாபவிமோசனம் அடைந்தான், மேலும் யானையான கஜேந்திரனுக்கும் சாபவிமோஷனம் அளித்தார். பின்னர் யானை கஜேந்திரனுக்கு பெருமாள் மோட்சம் அளித்ததை தான் கஜேந்திர மோட்சம் என்றழைக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சி இந்த வருடம் கோவிட் தொற்றால் கோவிலுக்குள்  கருடாழ்வார் சன்னதி முன்பு கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பக்தர்கள் அனுமதியில்லாததால் கோவில் பணியாளர்கள், அதிகாரிகள் பட்டர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கஜேந்திர மோட்சம் இப்படி நடைபெறுவது ஸ்ரீரங்கத்தில் கோவிலுக்குள் நடைபெற்றது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF