திருச்சியில் பிரபல கல்லூரி வாயில் முன்னதாக மாணவியை கட்டிப்பிடித்த சம்பவம் ஷேர் ஆட்டோ டிரைவருக்கு அடி உதை

திருச்சியில் பிரபல கல்லூரி வாயில் முன்னதாக மாணவியை கட்டிப்பிடித்த சம்பவம் ஷேர் ஆட்டோ டிரைவருக்கு அடி உதை

திருச்சி கருமண்டபம் அருகே உள்ள பிரபல கல்லூரி வாயிலுக்கு முன்னதாக மாணவி மதிய நேர கல்லூரிக்கு சாலையை கடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென ஒரு இளைஞர் அவரை கட்டிப்பிடித்து உள்ளார்.உடனடியாக மாணவி பதறி நண்பர்களை அழைத்துள்ளார். மற்ற நண்பர்களும் கல்லூரி வாயிலுக்கு முன்னதாக கூடியுள்ளனர். அப்பொழுது அப்பகுதி வழியாக ஷேர் ஆட்டோ ஒன்று வந்துள்ளது. ஷேர் ஆட்டோவில் உள்ள டிரைவர் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அந்த மாணவி இடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

அதன் பிறகு மாணவி பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். பெற்றோர் மற்றும் நண்பர்கள் விரைந்து வந்து யார் அந்த நபர் என்று கண்டுபிடிக்க முற்பட்டு உள்ளனர். ஆட்டோ டிரைவர் பற்றிய தகவலை மாணவி கொடுத்ததால் ஷேர் ஆட்டோ டிரைவரை தேடி உறவினர்கள் அலைந்து கொண்டிருந்தனர். அவரை கைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது அவர் கைப்பேசி எடுக்கவில்லை. சிறிது நேரத்தில் அவரை தீரன் நகர் பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். மாணவியின் உறவினர்கள் மது போதையில் இருந்து உள்ளனர். அவர்கள் ஷேர் ஆட்டோ டிரைவரை அடித்து உதைத்து ஷேர் ஆட்டோவை பிரபல கல்லூரிக்கு உள்ளே நிறுத்திவிட்டு போலீசாரிடம் ஒப்படைக்கும் முற்பட்ட பொழுது அவர்களே ஆட்டோ டிரைவரை காவல் வாகனத்தில் அழைத்து சென்றனர். தகவல் அறிந்த மற்ற ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களும் திருச்சி ஒருங்கிணைந்த அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் கூடினர். மாணவியின் உறவினர்களும் அங்கே கூடியதால் காவல் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

 இருவரும் வாக்குவாதம் தகராறு செய்ய முற்பட்டதால் போலீசார் இவர்களை கலைந்து செல்ல கூறினர். இந்நிலையில் தவறுதலாக ஆட்டோ டிரைவரை மாணவியின் உறவினர்கள் அடித்துள்ளது தெரியவந்துள்ளது. கட்டிப்பிடித்த இளைஞர்களுக்கும் ஆட்டோ டிரைவருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற எண்ணத்தில் இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு ஷேர் ஆட்டோ டிரைவரை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. மாணவியை கட்டிப்பிடித்த இளைஞர் யார் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? இல்லை வேண்டுமென்று இந்த செயலில் ஈடுபட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.