ஸ்ரீரங்கம் கோவில் வைகுந்த ஏகாதசி பெருவிழா -  ஆயிரங்கால் மண்டபத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் 

ஸ்ரீரங்கம் கோவில் வைகுந்த ஏகாதசி பெருவிழா -  ஆயிரங்கால் மண்டபத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் 

108 வைணவத் தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் வருகிற 03 .12. 2021 முதல் 24.12.2021 வரை வைகுந்த ஏகாதசி பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று (10.11.2021) வைகுந்த  ஏகாதசி பெருவிழாவிற்கான முகூர்த்தகால் நடும் வைபவம்  ஆயிரங்கால் மண்டபம் அருகில் கோயில் இணை ஆணையர்  மாரிமுத்து முன்னிலையில்  நடைபெற்றது.

வைகுந்த ஏகாதசி  பெருவிழா 03.12.21 அன்று திருநெடுந்தாண்டகத்துடன் பகல் பத்து திருவிழாக்களும், 13.12.21 அன்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலமும், முக்கியத்  திருநாளான நம்பெருமாள் இரத்தினங்கியுடன்  விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு 14.12 .21  அதிகாலை  04.30 - 05.45மணிக்கு நடைபெறும். டிசம்பர் 24ம் தேதி அன்று நம்மாழ்வார் மோட்ச்சதுடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவடையும். கோவில் இணை ஆணையர் மாரிமுத்து கூறும்போது....

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறோம்.மேலும் சொர்க்கவாசல் என்று பக்தர்களை அனுமதிப்பது குறித்து மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் வழிகாட்டுதலின் படியே    சொர்க்கவாசல் திருவிழாவிற்கு வெளி மாநிலங்களில் ,மாவட்டங்களிலிருந்து 8 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision