மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு

மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் வேலா மனநல காப்பகம், சங்கராலயா மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இடை நில்லா காப்பகம் மற்றும் 14-வயதிற்கு மேற்பட்ட அறிவுசார் குறையுடையோருக்கான விடுதி வசதி மற்றும் தொழிற்பயிற்சியுடன் கூடிய பெண்களுக்கான இல்லத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், இன்று (11.04.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் மனநல காப்பகங்களை பார்வையிட்டு தெரிவித்ததாவது; அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் இல்லங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் மூலமாக, மாற்றுத்திறனாளிகளுக்கான பதிவுச் சட்டம் 2016 மற்றும் மனநல காப்பகத்திற்கான மனநலச்சட்டத்தின் கீழ் பதிவுச் சான்று பெறப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சுமார் ரூ.13,00,800/- வீதம் மூன்று இல்லங்களுக்கு ரூ.39,02,403 அரசு மானியம் ஆண்டொன்றுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியமானது பணியாளர்கள் ஊதியம். பயனாளிகளுக்கான உணவூட்டு மானியம், மருத்துவ செலவினங்கள், தொழிற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் பயனாளிகளுக்கான இதர செலவினங்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது என மாவட்டஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

மேலும், மனநல காப்பகங்களை தூய்மையாக வைத்திருக்கவும், பல்வேறு பதிவேடுகள் உரிய முறையில் பராமரிக்கவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொண்டு அவர்களை மறுபடியும் அவர்களது தத்தம் குடும்பத்தினருடன் இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும், அவர்களுக்கு தொழிற்பயிற்சிகள் வழங்கவும், அதனை சந்தைப்படுத்துவதற்கான பயிற்சிகள் வழங்கவும், பயனாளிகளுக்கு தனி வங்கிக் கணக்கு துவங்குவதற்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பொது இடங்களில் சுற்றித்திரியும் மனநோயாளிகளை மீட்புத்திட்டத்தின் கீழ் மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குமாறு” மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். மேலும், மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து, புனித அன்னாள் அறிவுசார் குறையுடைய பெண்களுக்கான இல்லத்திற்கு, பெண்களுக்கான சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் நாப்மின் எரியூட்டும் இயந்திரம் வழங்குவதற்கான நடவடிக்கைமேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார், இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், உதவி இயக்குநர் (பயிற்சி) சௌந்தாயா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn