திருச்சியில் பாலியல் வழக்கில் ஒரு வருடத்திற்கு மேல் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது

சென்னை ரெட்ஹில்ஸ் புதுநகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் விஜய் (25). இவர் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் கடந்த 2021ம் வருடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறுமியைக் கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் புகாரில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிந்து விஜயைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் விஜய் ஜாமினில் வெளிவந்தார். இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் விஜய் தலைமறைவானார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் அவருக்குப் பிடியாணை பிறப்பித்தது. இதன்படி, கடந்த ஒரு வருடம் 46 நாட்களாக தலைமறைவாக விஜய் இருப்பதை அறிந்த திருச்சி மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் உத்தரவின்படி துவாக்குடி எஸ்ஐ நாகராஜன் தலைமையிலான போலீசார் சென்னை நெற்குன்றத்தில் தலைமறைவாக இருந்த விஜயை நேற்று கைது செய்து மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து நீதிபதி உத்தரவின்படி விஜயைப் போலீசார் சிறையில் அடைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision