"சசிகலா வந்த பிறகு அதிமுகவில் எந்த மாற்றமும் இருக்காது அரசியலில் எந்த மாற்றமும் இருக்காது" - திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

"சசிகலா வந்த பிறகு அதிமுகவில் எந்த மாற்றமும் இருக்காது அரசியலில் எந்த மாற்றமும் இருக்காது" - திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

திருச்சி மாவட்டம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேட்டியளிக்கையில்.. "அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி.ஏற்கனவே எந்த எந்த கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளதோ அந்த கட்சிகள் தற்போதும் இருக்கிறது.புதிதாக வேறு கட்சிகள் இணைவது தேர்தல் நேரத்தில் தான் தெரியும். சசிகலா வெளியே வந்த பிறகு அரசியலில் எந்த மாற்றமும் இருக்காது

Advertisement

பா.ஜ.க தற்போது வரை எங்கள் கூட்டணியில் இருப்பதாக தான் கூறுகிறார்கள். நாட்கள் குறைவு மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள்.

Advertisement

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு.தேர்தலில் வெற்றி பெற கூட்டணிகள் அமைக்கப்படுகிறது அரசியல் இருக்கும் வரைக்கும் சாகும் வரையும் எடப்பாடி தொகுதியில் தான் போட்டியிடுவேன். மீண்டும் அங்கு தான் போட்டி திமுக வை காப்பாற்றுவதை முதலில் பார்க்கட்டும்

 சட்டத்திற்கு புறம்பாக இருந்ததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டது பகல் பாராமல் நான் உழைக்கிறேன்.பெரும்பான்மை இடங்களில் மக்கள் எங்களை வெற்றி பெற செய்வார்கள்.

Advertisement

நான் அரசியலில் இருக்கும் வரை எடப்பாடியில் தான் போட்டியிடுவேன் நெருங்கும் நேரத்தில் கூட்டணி உறுதியாகும் பூசல் என்பது அ.தி.மு.க வில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இருக்கிறது. பொது தேர்வு தொடர்பாக அனைவரிடமும் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்" என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a