காவிரியில் காலை வைக்காதீர்கள் !! முதலை ஜாக்கிரதை...
திருச்சியில் காவிரி ஆற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவி வருகிறது. திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் தலைமையில் வனத்துறையினர் காவிரி ஆற்றில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். முதலை ஏதும் பிடிபடவில்லை.
பின்னர் வன அலுவலர் கிரண் நிருபர்களிடம் கூறியதாவது... காவிரி ஆற்றில் முதலை இருப்பதாக வனத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. முதலை அதற்கான இடத்தில்தான் இருக்கிறது. சிந்தாமணி பகுதியில் காவிரி ஆற்றில் மீன் பிடிக்க செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆட்டு - இறைச்சி, கோழி இறைச்சி, மிச்சமான உணவுகளை ஆற்றில் வீச ஆற்றுக்கு போக வேண்டாம்.இவ்வாறு வீசினால் முதலை மோப்பம் பிடித்து கரையேறி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இறைச்சிகள் மற்றும் குப்பைகளை கரையோரத்தில் கொட்ட வேண்டாம் அவர் எச்சரித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision