திருச்சி விமான நிலைய சரக்கு முனையம் திடீர் மூடல் ஏன் ஏற்றுமதியாளர்கள் கேள்வி - ரூ3.5 கோடி வர்த்தகம் பாதிப்பு வேதனை

திருச்சி விமான நிலைய சரக்கு முனையம் திடீர் மூடல் ஏன் ஏற்றுமதியாளர்கள் கேள்வி -  ரூ3.5 கோடி வர்த்தகம் பாதிப்பு வேதனை

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வருகின்ற 09.01.2022 தேதி முதல் சரக்கு ஏற்றுமதி சேவைகள் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் ஏற்றுமதி சேவைகள் நிலையம் மூடப்படவுள்ளது மீண்டும் சேவைகள் தொடங்குவதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

அனைத்து விமான நிறுவனங்கள் / IATA  முகவர்கள் கன்சோல்கள் விமான நிலைய   அலுவலகத்தில் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை திருச்சி விமான நிலையத்தில் சர்வதேச விமான சரக்கு முனையம் ஏற்றுமதிக்கு எந்த சரக்குகளையும் முன்பதிவு செய்ய ஏற்க வேண்டாம் என்று விமான நிலைய இயக்குனர் எஸ்.தர்மராஜ் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில்  கோவிட் காலத்தில் நாள் ஒன்றுக்கு 30 டன் காய்கறிகள், பூ வகைகள் உள்ளிட்டவற்றை  ஏற்றுமதியாளர்கள் அனுப்பி வைத்தனர். துபாய், சார்ஜா, சிங்கப்பூர், மலேசியா,தோகா உள்ளிட்ட நாடுகளுக்கு திருச்சியிலிருந்து சரக்குகள் அனுப்பப்பட்டது. நாளென்றுக்கு சுமார்  மூன்றரை கோடி வர்த்தகம் தற்போது திடீரென நிறுத்தப்பட்டு உள்ளதால் ஏற்றுமதியாளர்கள் மிகப் பெரிய மன வேதனையிலும் குழப்பத்தில் உள்ளனர். இதற்கான காரணத்தை விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிடவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn