திருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தலுக்கு உதவிய ஏர் இந்தியா நிறுவன ஊழியர் உட்பட 5 பேர் கைது!!

திருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தலுக்கு உதவிய ஏர் இந்தியா நிறுவன  ஊழியர் உட்பட 5 பேர் கைது!!

துபாயில் இருந்து திருச்சிக்கு புதன்கிழமை அதிகாலை வந்த ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது .இதன் பேரில் தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பயணிகளிடம் தங்கம் பறிமுதல் செய்யவில்லை. இதற்கிடையே ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர் ஒருவர் மூலம் தங்கம் கடத்தல் கும்பலுக்கு 2.5 கிலோ தங்கம் கை மாறப் போவதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் வெளிப்புற பகுதியில் வாகனங்கள் நிறுத்த கூடிய இடத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். 

Advertisement

அப்போது ஏர் இந்தியா நிறுவன ஊழியர் கோபிநாத்(50) முக்கிய பிரமுகர்கள் வரக்கூடிய கார்கோ பகுதி வழியாக வந்து தங்கம் கடத்தல் கும்பலை சந்தித்தார். அப்போது தனது கையில் வைத்திருந்த தங்க கட்டிகளை தங்க கடத்தல் கும்பலிடம் கோபிநாத் கொடுக்கும்போது சுங்கத்துறை அதிகாரிகள் சுற்றிவளைத்தனர்.

Advertisement

இதைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த தங்க கடத்தலில் துபாய் பயணி உள்பட மேலும் மூவருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 5 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து திருச்சி நீதிமன்ற நடுவர் எண் 2இல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 1.5 கோடி மதிப்புடைய தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO