மணப்பாறை அருகே பள்ளத்தில் இறங்கிய 108 ஆம்புலன்ஸ் டிரைவரின் சாமார்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

மணப்பாறை அருகே பள்ளத்தில் இறங்கிய 108 ஆம்புலன்ஸ் டிரைவரின் சாமார்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக துளசி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று மதியம் மணப்பாறையில் இருந்து புத்தாநத்தம் நோக்கி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் (புல்லட்) சென்று கொண்டிருந்தார். பிள்ளையார் கோவில்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றார்.

அப்போது எதிரே 108 ஆம்புலன்ஸ் வருவதை அறிந்து உடனே லாரிக்கு பின்னால் வர முயற்சித்த போது பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் சிறப்பு உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகனத்தில் பின் பகுதியில் மோதியது. இதில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்தவர்களும் சாலையில் விழுந்தனர். இதைப்பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தமிழ்ச்செல்வன் நேராக சென்றால் சாலையில் விழுந்திருப்பவர்களின் மீது மோதி விடும் என்பதை அறிந்து சாலையோரத்தில் ஆம்புலன்ஸ் இறக்கினார்.

இருப்பினும் சாலையோர பள்ளத்தில் சென்று சாய்ந்த நிலையில் ஆம்புலன்ஸ் நின்று விட்டது. ஆம்புலன்சில் இருந்த கர்ப்பிணியும் பத்திரமாக இருந்தார். உடனே 108 ஆம்புலன்சில் இருந்த கர்ப்பிணியை மற்றொரு ஆம்புலன்சில் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து மோதியவர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் துளசியும் காயமடைந்தார்.

இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு வண்டியை பள்ளத்தில் இறக்காவிட்டிருந்தால் இருசக்கரவாகனத்தில் மோதிக்கொண்டு கீழே விழுந்த இருவர் மீதும் ஆம்புலன்ஸ் மோதி உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும் என்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் சாமர்த்தியத்தை அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn