திருச்சி - மாலத்தீவிற்கு நேரடி விமான சேவை. உற்சாகத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள்

திருச்சி - மாலத்தீவிற்கு நேரடி விமான சேவை. உற்சாகத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள்

மாலத்தீவில் வசிக்கும் தமிழர்களின் நீண்ட நாள் கனவு மற்றும் எதிர்பார்ப்புகளான தமிழகத்திற்கான நேரடி விமான சேவை, இதுவரை இல்லாத நிலையில் சென்ற ஆண்டு கொரோனா பாதிப்பின் போது வாடகை விமானங்கள் மூலம் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.

ஆனால் வெளிநாடு வாழ் தமிழக ஆசிரியர் சங்கத்தின் முயற்சிகளின் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி விமானநிலைய அதிகாரிகளின் தீவிர ஒத்துழைப்பு மற்றும் அயராது முயற்சி, எல்லாவற்றிற்கும் மேலாக மாலத்தீவில் இருக்கும் ஏர் இந்தியா விமான நிலைய மேலாளர் ஆரோக்கியதாஸ் தொடர் முயற்சி மற்றும் ஒத்துழைப்பு காரணமாக இன்று திருச்சியிலிருந்து மாலேக்கு சரக்கு விமான சேவையும், மாலேயில் இருந்து திருச்சிக்கு பயணிகள் விமான சேவையும் சிறப்பு விமானம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமான முறையில் நடந்து முடிந்திருக்கிறது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க விமான பயணத்தின் பெருமை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தினரையும்,
ஏர் இந்தியாவின் மாலத்தீவுகள் மேலாளர் ஆரோக்கியதாஸ் மற்றும் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலைய அதிகாரிகளையும் சேர்ந்தது. இந்த விமான சேவை தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது ஆவல். 

விரைவில் அதற்கான ஏற்பாடுகளை துறை சார்ந்த அதிகாரிகள் மேற்கொண்டு ஆவன செய்வார்கள் என்று எதிர்பார்த்து மீண்டுமொரு முறை இம்முயற்சிக்கு ஒத்துழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நமது சமூக வலைதளங்கள் குழுமம் சார்பில் நன்றி கூறிக்கொள்கிறோம். மாலத்தீவில் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை ஒருங்கிணைத்து செயல்படுத்திய தீ.செந்தில்குமார், பொதுச் செயலாளர், வெளிநாடு வாழ் ஆசிரியர் சங்கம் மற்றும் கௌரவத் தலைவர், வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கம் அவர்களுக்கும் நமது நிறைவான நன்றி.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW