டெல்டா பிளஸ்  வைரஸ் மூன்றாவது அலையின் தொடக்கமா?   

டெல்டா பிளஸ்  வைரஸ் மூன்றாவது அலையின் தொடக்கமா?    

உலகம் முழுவதும் பரவி வரும் டெல்டா வைரஸ் 85 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய்த் தடுப்பு மையம் தரப்பில் கூறும்போது, “டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 85 நாடுகளில் டெல்டா கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா போன்ற உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். இதில் டெல்டா வைரஸ் அதிக தொற்றுத் தன்மை கொண்டதாக உள்ளது. டெல்டா வைரஸ் பரவுதலில் இதே நிலை தொடர்ந்தால் உலகம் முழுவதும் டெல்டா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், டெல்டா வைரஸால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருமாறிய கரோனா வைரஸ்கள், கிரேக்க எழுத்துகளான ஆல்ஃபா, பீட்டா, காமா ஆகிய வடிவத்தில் குறிப்பிடும்போது எளிதாக அடையாளப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்து, உருமாறிய கரோனா வைரஸ்களுக்குப் பெயரையும் வெளியிட்டது.மேலும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் பரவும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸுக்கு லாம்ப்டா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 17 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 38 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
முதல் முதலில் கொரோனா வைரசின் உருமாற்றம் ‘ஆல்பா’ என்று கண்டறியப்பட்டது. இதுதான் பல நாடுகளிலும் பரவியது.இந்த நிலையில் இந்தியாவில் 2-வது அலை வேகமாக தாக்கியது. இதில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டது. இதற்கு உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் காரணம் என்பது தெரியவந்தது. B 1.617 என்ற இந்த வகை வைரஸ் இந்தியாவில்தான் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த உருமாறிய வைரஸ் தடுப்பூசி மற்றும் கொரோனா மூலம் உருவான நோய் எதிர்ப்பாற்றலை தாக்கி தன்னை பாதுகாத்துக் கொள்ள இந்த உருமாற்றத்தை எடுத்து இருக்கிறது. கடந்த 2 மாதங்களில் டெல்டா 80 சதவீதம் உருமாறி இருக்கிறது.இந்த வகை வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது. பிரிட்டனில் புதிதாக தொற்று ஏற்படுவதற்கு 91 சதவீதம் இந்த டெல்டா வகை வைரஸ்தான் காரணம் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
 ஆல்பாவைவிட டெல்டா மிக தீவிரமான பாதிப்புகளை உருவாக்கும்.  டெல்டா ப்ளஸ்( டெல்டாவுடன்K 417N மாற்றம்  கூடுதலாக உள்ளது) 

உதாரணமாக ஆல்பா தாக்கிய ஒருவரிடம் இருந்து 4 முதல் 5 பேருக்கு பரவும். ஆனால் டெல்டா வகை 5 முதல் 8 பேருக்கு பரவும்.மேலும் தொற்று ஏற்பட்ட 3 முதல் 4 நாட்களில் 12 சதவீதம் நோயாளிகளின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிடுகிறது. ஆனால் ஆல்பா வகை தாக்கத்தின் போது இந்த பாதிப்பு 2 முதல் 3 சதவீதமாகத்தான் இருந்ததாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தடுப்பூசிக்கு டெல்டா ப்ளஸ் சரியாகக் கட்டுப்படுவதில்லை என்பதைக் கருத்தில்கொண்டு மூலக்கூறு ஆய்வுகளை அதிகப்படுத்தியும், நோய் பாதித்தவர்களைப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்து, அவர்களை ஆரம்பத்திலேயே தனிமைப்படுத்துவதும்தான் சிறந்த தடுப்புப் பணியாக இருக்கும் என்பதை தமிழக அரசு உணர்ந்து, இப்போதே விழித்தெழுந்து சரியான திட்டமிடலோடு செயல்பட்டால்தான் 3-ம் அலையை சரியாகக் கையாள முடியும்.


மத்தியப்பிரதேம், போபாலில் டெல்டா ப்ளஸ் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சுகாதாரத்துறையும், அங்கு டெல்டா ப்ளஸ் வைரஸை உறுதிசெய்தபின், அது அங்கு 3-ம் அலைக்கு வித்திடலாம் எனும் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. தமிழகமும் மகாராஷ்டிராவைப் பின்பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW