பொது சுவரொட்டி பலகை - திருச்சி மாநகராட்சி புதிய முயற்சி

பொது சுவரொட்டி பலகை - திருச்சி மாநகராட்சி புதிய முயற்சி

திருச்சி மாநகரில் அரசு மற்றும் தனியார் சுவர்களில் ஒட்டப்படும் சுவரொட்டிகளால் மாநகரின் அழகு பாலாகிறது. இதனை மீட்டெடுப்பதற்காக தமிழகத்திலேயே முன்மாதிரியாக 25 இடங்களில் பொது சுவரொட்டி பலகை நிறுவப்பட்டுள்ளது.

1994 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது திருச்சி. மாநிலத்தின் மையப் பகுதியாக விளங்கும் திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள், ஐந்து மண்டலங்கள் உள்ளன. இதன் மொத்த பரப்பளவு 167.2,3 சதுர கிலோமீட்டர் எங்கு 2.35 லட்சம் குடியிருப்புகளில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 

பொலிவுறு நகரத் திட்டத்தில் இணைந்துள்ள திருச்சி மாநகரின் அழகை பாழ்படுத்துவதில் சுவரொட்டிகள் முக்கிய பங்கு வைக்கின்றன. பாலங்கள், அரசு அலுவலங்கள் மற்றும் தனியார் சுவர்கள், கட்டடங்கள், குப்பை தொட்டிகள், பேருந்து நிலையங்கள், சாலையின் தடுப்பு சுவர்கள் போன்ற மாநகரின் திரும்பிய திசை எல்லாம் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. 

பல இடங்களில் முகம் சுழிக்கும் வகையிலான சுவரொட்டிகளும் இடம்பெறுகின்றன. இவை மாநகர அழகை கேள்விக்குறியாக்கி வருகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழகத்திலேயே முதன் முறையாக திருச்சி மாநகராட்சி புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து மாநகராட்சி மண்டல அலுவலருடன் ஆலோசித்து பொது சுவரொட்டிப் பலகை என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அதன்படி மாநகராட்சியின் 5 மண்டலங்களும் தலா ஐந்து இடங்களை தேர்வு செய்து பொது சுவரொட்டி பலகை வைக்கப்படுகிறது. இந்தப் பலகையின் மட்டுமே சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும் வேறு இடங்களில் ஒட்டினால் அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக நீதிமன்ற வளாகம் அருகே 98 சதுர அடி பரப்பளவில் பொது சுவரொட்டி பலகை நிறுவப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஐந்து மண்டலங்களிலும் தல ஐந்து இடங்களை தேர்வு செய்து பொது சுவரொட்டி பலகை நிறுவப்பட உள்ளது. மேலும் முதற்கட்டமாக 25 இடங்கள் என்பதை தேவைக்கேற்ப அதிகப்படுத்தி மாநகரின் அழகை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO