திருச்சியில் 17,18,19 தேதிகளில் டாஸ்மாக் கடை எங்கு திறக்கலாம் - ஆட்சியர் உத்தரவு

திருச்சியில் 17,18,19 தேதிகளில் டாஸ்மாக் கடை எங்கு திறக்கலாம் - ஆட்சியர் உத்தரவு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 17.02.2022 காலை 10.00 மணி முதல் 19.02.2022 இரவு 12.00 வரை நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களிலும் மற்றும் 22.02.2022 அன்றைய நாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் 2022 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FL.2 முதல் FLII (FL-6 தவிர) அனைத்தும் மூடப்படும். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல் தெரிவித்தார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வர்டு உறுப்பினர் பதவிக்கு ஒரே கட்டமாக 19.02.2022 முற்பகல் காலை (07.00) மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் இடத்திலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றனளவிற்குள் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு 1 முதல் 65 வரை, துறையூர், மணப்பாறை துவாக்குடி, இலால்குடி, முசிறி ஆகிய நகராட்சிகள் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி. நல்லகுடி, காட்டுப்புத்தூர், கூத்தையர், மண்ணச்சநல்லும், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளூர், எஸ். கண்ணனூர். சிறுகமணி, தாத்தையங்கார்பேட்டை, தொட்டியம், உப்பிலியபுரம் பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் மற்றும் FL.2 முதல் FL11 (FL6 தவிர) உரிம ஸ்தலங்களில் உள்ள பார்கள் அனைத்தும் 17.02.2022 முற்பகல் 10.00 மணி முதல் 19.02.2022 நள்ளிரவு 12.00 மணி வரையிலும் மூடப்பட்டிருக்கும்.

மேலும் மேற்படி பகுதிகளில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள இடங்களுக்கு அருகில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் பதுக் கூடங்கள் மற்றும் FL2 முதல் FLI1 (FL-6 தவிர) உரிம ஸ்தலங்களில் உள்ள பார்கள் அனைத்தும் 22.02.2022 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறு உள்ளதால் மூடப்பட்டிருக்கும்.

எனவே, மேற்படி தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn