தொடர் மழையால் நெல் கதிர்கள் சேதம் - விவசாயிகள் கவலை!

தொடர் மழையால் நெல் கதிர்கள் சேதம் - விவசாயிகள் கவலை!

மேட்டூா் அணையில் 100−அடிக்கும் குறையாமல் போதிய அளவு தண்ணீா் இருப்பு இருந்ததால் டெல்டா மாவட்டங்களுக்கு சாகுபடிக்கு குறிப்பிட்ட தேதியான ஜீன் 12−ல் தண்ணீா் திறக்கப்பட்டது.  

Advertisement

திருச்சி,கரூா் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தொடா்ந்து அவ்வப்போது பெய்த மழையோடு பாசனத்திற்க்கு தண்ணீா் கிடைத்து வந்ததால் இரு மாவட்டங்களிலும் பல்லாயிர கணக்கான ஏக்கா் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் ஒரு போக சாகுபடியான சம்பா சாகுபடி முன் கூட்டியே துவங்கப் பட்டது, அப்படி துவங்கப்பட்ட பகுதிகளில் தற்போது நெற்கதிா்கள் விளைந்து அறுவடை செய்யும் நிலையில் உள்ள தருணத்தில் கடந்த ஒரு மாத காலமாக அடுத்தடுத்து பெய்து வரும் தொடா் மழையால் அறுவடை செய்ய முடியாத நிலையில் நன்கு விளைந்த நெற்கதிா்கள் வயலிலேயே சாய்ந்து நெல்கள் முளைத்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திவுள்ளது.

குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூா் வட்டாரத்தில் இனாம்புலியூா், போசம்பட்டி,போதாவூா் பெருகமனி, அணலை, திருப்பராய்துறை, இதன் சுற்று வட்டார பகுதிகள், கரூா் மாவட்டத்தில் நச்சலூா், இனுங்கூா், நெய்தலூா் காலணி, உள்ளிட்ட இதன் சுற்று வட்டார பகுதிகளிலும் , குளம் மற்றும் கினற்று நம்பி சாகுபடி செய்யப்படும் மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் பாதிப்க்குள்ளாகி உள்ளது. 

 ஏக்கா் 1−க்கு ஏறத்தாழ ரூ,30,000 (முப்பதாயிரம்) செலவு செய்து அறுவடை நேரத்தில் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்ட நிா்வாகம் பாதிக்கப் பட்ட பகுதிகளை கண்டறிந்து உாிய கணக்கெடுத்து அரசின் கவணத்திற்கு கொன்டு சென்று பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு உாிய இழப்பீடை பெற்று தர வேன்டும்‌ என்றும்,

Advertisement

காலம் தாழ்த்தாமல் அனைத்து பகுதிகளிலும் நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து ஈர பதம் 18−20, சதவீதம் என கணக்கு பாா்க்காமல் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய வேன்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Advertisement