திருச்சி அருகே கிராமத்தில் தீண்டாமை கொடுமையா?ஆட்சியர் அதிரடி ஆய்வு

திருச்சி அருகே கிராமத்தில் தீண்டாமை கொடுமையா?ஆட்சியர் அதிரடி ஆய்வு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் தெற்கு அம்மாபட்டியில் சாதிய தீண்டாமை நடப்பதாக எழுந்த புகாரின்பேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் நேரில் சென்று அதிரடி ஆய்வு நடத்தினார். தீண்டாமை கொடுமை ஏதும் நடக்கிறதா என்று அங்குள்ள மக்களிடம் கேட்டறிந்தார்.  குறிப்பாக அந்த கிராமத்தில் 143 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குறிப்பிட்ட சமூகத்தினரை தண்ணீர் குடிக்கும் போது கையில் வாங்கி குடிக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டு எழுந்த  புகாரின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்த ஆட்சியர் தீண்டாமை கொடுமை ஏதும் நடைபெறவில்லை என அவர் தனது நேரடி விசாரணையில் பிறகு உறுதிபட தெரிவித்துள்ளார்.மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேரடி விசாரணை செய்த பொழுது
, ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர், மணப்பாறை வருவாய் வட்டாட்சியர் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO