50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து பசுவை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்

50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து பசுவை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கரும்புளிப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சங்கர். இவர் கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் காலையில் வீட்டின் அருகே மேய்ச்சலில் இருந்த கால்நடைகளில் பசு ஒன்று அருகிலிருந்த 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது.

கிணற்றில் சுமார் 20 அடி நீர்மட்டம் இருந்ததால் தண்ணீரில் பசு நீந்தியவாறே தத்தளித்துள்ளது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் கயிறு மூலம் பசுவை கிணற்றில் ஒரு பகுதியில் நிலைநிறுத்தினர்.

அதனைத்தொடர்ந்து தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற மணப்பாறை தீயணைப்புத்துறை வீரர்கள் கிணற்றில் இறங்கி பசு கயிறு கட்டி மேலே கொண்டு வந்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

உயிருடன் பசுவை மீட்டு கொடுத்த தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn