இலங்கை அகதிகள் முகாம் சுற்றுச்சுவரை சீரமைத்து தந்த திருச்சி மாநகர காவல்துறை

இலங்கை அகதிகள் முகாம் சுற்றுச்சுவரை சீரமைத்து தந்த திருச்சி மாநகர காவல்துறை

திருச்சி மாநகர காவல் ஆணையர்  கடந்த 01.07.2021 அன்று கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை பார்வையிட்டு முகாம் வாசிகளிடம் கலந்துரையாடினார். அவர்களது குறைகளை கேட்ட மாநகர காவல் ஆணையர் அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

கடந்த 19.07.2021 அன்று கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் மற்றும் சிறப்பு முகாம்வாசிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், திருச்சி மாநகர காவல் - பாரதிதாசன் பல்கலைகழக இளையோர் செஞ்சிலுவை சங்கம் - SRM மருத்துவ கல்லூரியுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் பொது நலம், எழும்பியல், தோல், இதயம், வயிறு, காது, மூக்கு மற்றும் தொண்டை பிரிவுகளைச் சார்ந்த மருத்துவர்களை கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த 22.07.2021 அன்று இலங்கை அகதிகள் முகாமில் காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் (Police Boys & Girls Club) துவக்கி வைக்கப்பட்டது. இம்மன்றத்தில் குழந்தைகளுக்கான புத்தகங்கள், பல்வேறு விளையாட்டு பொருட்கள் ஆகியவை அவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் கடந்த 26.07.2021 தேதியன்று இலவச சட்டப்பணிகள் குழு மூலம் முகாம்வாசிகள் தங்களது தாய்நாட்டில் சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கான சட்ட ஆலோசனை வழங்கப்பட்டது. கடந்த 02.08.2021 தேதியன்று தமிழக அரசு மறுவாழ்வுதுறை மற்றும் பெர்ல் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இலவச தொழிற்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இப்பயிற்சி முகாமில் அவர்களது விருப்பப்படி தையல், தட்டச்சு மற்றும் கணினி பயிற்சிகள் வழங்கப்பட்டது.

அதன்தொடர்ச்சியாக கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் சுற்றுச்சுவரின் ஒருபகுதி சிதிலமடைந்துள்ளதால், பாதுகாப்பு இல்லாமல் உள்ளதாகவும், அந்நிய நபர்கள் அனுமதியின்றி உள்ளே பிரவேசிப்பதாகவும் சுற்றுச்சுவர் எழுப்பி பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற முகாம்வாசிகளின் நீண்டநாள் கோரிக்கையை நேற்று  04.08.2021- திருச்சி மாநகர காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனம் இணைந்து சிதிலமடைந்த சுவர் புதியதாக கட்டப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

முகாம் பகுதியில் CCTV கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இச்செயல்பாடுகளுக்கு முகாம்வாசிகள் திருச்சி மாநகர காவல்துறைக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளார்கள். மேலும் இப்பணியை சிறப்பாக செய்த கே.கே.நகர் காவல் நிலைய காவல் ஆளிநர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் பாராட்டுதலை தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn