மாநகர சாலைகளில் பெரிய பள்ளம் முன்பு பெரிய கல் - வாகன ஓட்டிகளே உஷார்
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து திருச்சியில் ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்ததால் திருச்சி மாநகரில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, கண்டோன்மெண்ட் காவல் நிலையம் சாலை, உறையூர், மத்திய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதில் மிகப்பெரிய பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் அந்த குழிகளுக்கு முன்னால் பெரிய கற்களை வைத்து தடுப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இரவு நேரங்களில் இந்தப் பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் இந்தக் கல் மீது மோதி விபத்துக்கு உள்ளாகின்றனர். உடனடியாக மாநகராட்சியின் இந்த பள்ளங்களை மூடி பெரும் விபத்தை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision