திருச்சியில் ஸ்ரீரங்கம் முதலிடம் - மாவட்ட ஆட்சியர் பேட்டி

திருச்சியில் ஸ்ரீரங்கம் முதலிடம் - மாவட்ட ஆட்சியர் பேட்டி

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்பு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2022 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க திருத்தும் வரை மற்றும் தொடர் திருத்தம் செய்யப்பட்ட விவரத்தின்படி மொத்த ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 11,15,975ம், பெண் வாக்காளர் எண்ணிக்கை 11,85,14ம், திருநங்கைகள் 289 என மொத்தம் 23,01278 வாக்காளர் தற்போது உள்ளனர். 

இதில் அதிகமான வாக்காளர் கொண்ட தொகுதியாக ஸ்ரீரங்கம் தொகுதியும், குறைவான வாக்காளர் கொண்ட தொகுதியாக லால்குடி தொகுதியில் உள்ளது. மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் 2,80659 வாக்காளர்களும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் 3,02447 வாக்காளர்களும், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் 2,66,173, வாக்காளர்களும், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் 2,50,159 வாக்காளர்களும், திருவரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 2,91,013 வாக்காளர்களும், லால்குடி சட்டமன்ற தொகுதியில் 2,16,917 வாக்காளர்களும்,

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 2,45,303 வாக்காளர்களும், முசிறி சட்டமன்ற தொகுதியில் 2.26,112 வாக்காளர்களும், துறையூர் சட்டமன்ற தொகுதியில் 2,22,495 வாக்காளர்கள் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 2543 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில் தற்போது லால்குடி சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி கூடுதலாக சேர்க்கப்பட்டு 2544 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் பணியில் தமிழகத்தில் 7வது இடத்தில் திருச்சி உள்ளது என தெரிவித்தார்.

இதில் கட்சி பிரதிநிதிகள் திமுக சார்பில் மதிவாணன் தினகரன், காங்கிரஸ் சார்பில் ஜவகர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிர்வாகிகள் சுரேஷ், சிவா, மா.கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெற்றிசெல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO