வீட்டில் தீ விபத்து - விரைந்து வந்து முக்கிய ஆவணங்களை மீட்ட தீயணைப்பு துறையினர்!!

வீட்டில் தீ விபத்து - விரைந்து வந்து முக்கிய ஆவணங்களை மீட்ட தீயணைப்பு துறையினர்!!

திருச்சி பெரிய மிளகுபாறை புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் செல்லையா. இவர் அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் மூன்றாவது மாடியில் வசித்து வந்துள்ளார்.

இன்று மதியம் வீட்டில் இருந்த போது எதிர்பாராத விதமாக குளிர்சாதன பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு தீ வீடு முழுவதும் மளமளவென பரவியது.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு திருச்சி தீயணைப்பு துறை நிலைய மேலாளர் மெல்கிராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் தீயணைப்பு வீரர் மைக்கேல் வீட்டிற்கு உள்ளே சென்று ஆதார் அட்டை ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மீட்டார்.