"குழந்தைகள் தெய்வம் போன்றவர்கள்"- குழந்தைகளின் முன்னேற்றத்தில் பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதில்லை - ஐஜி ஜெயராம் பேட்டி!!

"குழந்தைகள் தெய்வம் போன்றவர்கள்"- குழந்தைகளின் முன்னேற்றத்தில் பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதில்லை - ஐஜி ஜெயராம் பேட்டி!!

திருச்சி சுப்பிரமணியபுரம் காவலர் திருமண மண்டபத்தில், குழந்தைகள் நல காவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜெயராம், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன்,

Advertisement

திருச்சி மத்திய மண்டல காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் கயல்விழி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஐஜி ஜெயராம் திருச்சி சரகத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற இடங்களாக 30 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அவ்விடங்களுக்கு நேரில் சென்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இதுபோன்ற பாதுகாப்பற்ற சூழல் இல்லாத நிலையை மாற்ற வழிவகை செய்யப்பட்டு வருகிறது. போதிய ஆதாரங்கள் இல்லாமல் பாலியல் குற்றங்களில் குற்றவாளிகள் வெளியே வருவதை தவிர்க்கும் வகையில் கூடுதலான ஆதாரங்களைத் திரட்டுவது விசாரணை மேற்கொள்வது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

குற்றங்கள் நடக்காமல் இருக்க தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. குற்றங்கள் தொடர்பான கைதிகள் கைது செய்யப்படுவதோடு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குழந்தைகளை முன்னிறுத்தி குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது என்று கேள்விக்கு பதிலளித்தவர், குழந்தைகள் தெய்வம் போன்றவர்கள். குழந்தைகளை வைத்து அந்த மாதிரியான புகார்கள் இதுவரை என் கவனத்துக்கு வரவில்லை என்றார்.

தொடர்ந்து "எச்சரிக்கை" என்ற தலைப்பில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவன் அல்லது சிறுமியுடன் பாலியல் செயல்பாடு என்பது குற்றம் இதற்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம் என்ற விழிப்புணர்வு பிரசுரங்களை வெளியிட்டதுடன், கேடயம் அமைப்பின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு காணொளி ஊர்தியை பார்வையிட்டு மத்திய மண்டல காவல் துறை தலைவர் ஜெயராம் துவக்கி வைத்தார்.