ஐ லவ் திருச்சி - இரயில்வே சந்திப்பின் நுழைவாயிலில் செல்பி பாயிண்ட்
தமிழகத்தின் மையப் பகுதியாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி விளங்கி வருகிறது. திருச்சிராப்பள்ளி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில் பூங்காக்கள், செயற்கை நீரூற்றுகள், வண்ண விளக்கு அலங்காரங்கள், சுவர் ஓவியங்கள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
திருச்சியின் போக்குவரத்து வசதிகள் மிக முக்கியமான ஒன்று ரயில்வே போக்குவரத்து. ரயில்வே பயணிகள் பயன்படுத்தும் வகையில் திருச்சி ரயில்வே சந்திப்பின் நுழைவுவாயில் அருகே செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டு ஐ லவ் திருச்சி வாசகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருச்சியில் மலைக்கோட்டை நுழைவுவாயில் அருகே செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ரயில்வே நுழைவு வாயிலின் அருகே அமைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் பயணிகளை வரவேற்கும் விதத்தில் "ஐ லவ் திருச்சி" என்ற வாசகம் பயணிகளிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn