உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருச்சியில் வீதி நாடகம்:
உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு வீதி நாடகம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலும் சத்திரம் பேருந்து நிலையத்திலும் நிகழ்த்தப்பட்டது.
இவ்விழாவில் சட்டப்பணிகள் நீதிபதி திருமதி நந்தினி தலைமையில் கலைக்காவிரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ்குமார் உருவாக்கத்தில் வீதி நாடகம் நடைபெற்றது. பெண் குழந்தை கடத்தல், பெண் கல்வி, பெண் குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு, ஊட்டச்சத்தான உணவு, இயற்கைச் சூழல் ஆகியவற்றுக்கான உத்தரவாதம் வழங்குதல், பெண் குழந்தைகள் இளம் வயது திருமணம் தடுத்தல், பாலியல்வல்லுறவு, வன்முறையை தடுத்தல் எதிர்கொள்ளல் , பாலின சமத்துவம், அவர்களின் வளர்ச்சி மேம்பாட்டிற்கு துணை நிற்றல், மற்றும் போக்சோ சட்டம் குறித்தும், தீங்குகள் நடைபெறும் போது மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள், பாலியல் சீண்டல்கள் செய்வோரை எவராயினும் துணிவுடன் எதிர்கொள்ளல், குறித்தும் மேலும் ஆலோனைக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தை நாடி பயன் பெறவும் வீதி நாடகத்தில் விழிப்புணர்வு வழங்கப்பட்டு பொதுமக்களுடன் சேர்ந்து உறுதி மொழி எடுக்கப்பட்டது.
நாடகத்தில் இனியவன், ஆகாஷ், மணிகண்டன், அபித்நிக்கோலஸ், பிரித்வி, ரூத் உள்ளிட்ட ஆணைக்குழு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.