“பப்ஜி” விளையாடுபவர்களா? நீங்கள்! இது உங்களுக்கான ஸ்பெஷல் ஸ்டோரி!

“பப்ஜி” விளையாடுபவர்களா? நீங்கள்! இது உங்களுக்கான ஸ்பெஷல் ஸ்டோரி!

ஜெய் பப்ஜி……
ஜெய் பப்ஜி…..
வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்…
சிறிது சிரிப்புடன் இந்த வார்த்தைகளை கேட்கும் போதே பப்ஜி விளையாட்டுதான் என்று ஊகித்திருப்போம். “இந்த உலகத்துல தன்னை வழிநடத்த தலைவனைத் தேடி அலையுது ஒரு கூட்டம்.தான் வழிநடத்த அடிமைகளை தேடி அலையுது இன்னொரு கூட்டம். ஆனால் நான் அந்தக்  கூட்டத்தை சேர்ந்தவன் அல்ல…..ஆகாயத்திலிருந்து குதிக்கணும் ஆயுதத்தை எடுக்கணும் அப்புறம்தான் ஆரம்பிக்கும் உண்மையான யுத்தம்.வாழ்க்கை ஒரு வட்டம் என்று சொல்வாங்க இங்க வட்டத்துக்குள்ள இருந்தால்தான் வாழ்க்கை”.இது ஏதோ தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ஹாலிவுட் திரைப்படம் அல்ல.ஆம் பிரபல ஆன்லைன் விளையாட்டும்…இந்த உலகத்தோட அதிகப்படியான பதிவிறக்கம் செய்யப்பட்ட விளையாட்டும் என்கிற பிளேயர்ஸ் அன்நவுண்ட் பேட்டில்கிரவுண்ட் என்கிற பப்ஜி தான்.
உலகளவில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் இளைஞர்களை தன்னோட கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராணுவ போர் முறையான விளையாட்டுதான் பப்ஜி.
இந்த விளையாட்டில்
ஒரு குறிப்பிட்ட நேரத்தில்
ஒரு குறிப்பிட்ட நூறுபேர்
ஒரு குறிப்பிட்ட இடத்தில் விளையாடுவாங்க. இங்க அவங்களுக்கு தேவையான போர் ஆயுதங்களும் தரப்பட்டிருக்கும். விளையாட்டு ஆரம்பித்த உடனே செத்தாலும் செத்ததுதான்.நூறு பேரில் கடைசிவரை யார் இருந்தாலும் இருக்குறதுதான்.அந்த கடைசி வீரர் தான் வின்னர்.

இப்படிப்பட்ட இந்த போர்முறை விளையாட்டானது நிறைய விபரீதமும் இருக்கிறது.இளைஞர்கள் ஒரு அளவிற்கு மீறி விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர்களாகிவிடுகின்றனர்.
இதை விளையாடும் சமயத்தில் பெற்றோரோ அல்லது யாராவது விளையாடுவதை தடுக்க நினைத்தால் கோபத்தின் உச்சிக்கே சென்ற சில நிகழ்வுகளை காண்போம்.

டெல்லியில் பப்ஜி விளையாடுவதை தடுத்த தந்தை தாய் மற்றும் தங்கையை கொன்ற 19 வயது கல்லூரி மாணவன்.

பப்ஜி விளையாட செல்போன் கேட்டு பணம் தராததால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்.

பப்ஜி விளையாடும்போது செல்போனில் சார்ஜ் தீர்ந்ததால் ஏற்பட்ட விபரீதம்.

என ஒருபுறம் நீண்டுகொண்டே செல்கிறது.இன்னும் இந்த விபரீதங்கள் மேலும் நீளும் நிலைமையில் தான் உள்ளது.
இதைப்பற்றி பிரதமர் மோடியே “உங்கள் பையன் பப்ஜி விளையாடுகிறாரா?” என்று ஒரு கூட்டத்தில் கேட்டது நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறது.
இப்படி பப்ஜி விளையாடுவதால் தங்களுடைய நேரங்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். பல இடங்களில் இந்த விளையாட்டை தடை செய்யவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.இதற்கு பப்ஜி நிர்வாகம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “ஆரோக்கியமான மற்றும் சீரான விளையாட்டு சூழலை வளர்ப்பதற்கு பல அம்சங்கள் மற்றும் விரிவாக்கங்களை நாங்கள் வளர்த்து வருகிறோம். இது வீரர்களுக்கு ஒரு சிறப்பான சூழலை வழங்குவதற்காக உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது .
மேலும் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் உள்ள மிகவும் உணர்வுபூர்வமான விளையாட்டு பிரியர்களின் கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்பதாகவும்” குறிப்பிட்டுள்ளது.

“பப்ஜி,விளையாடுபவர்களை வீரர்களாக பார்க்கிறது…
விளையாடுபவர்கள்,
பப்ஜியை வெறித்தனமாக பார்க்கிறார்கள்….”

இன்றைய இளைஞர்கள் கையில் உள்ள கைப்பேசியில் வாட்ஸ்அப் ,பேஸ்புக், இன்ஸ்டாகிராமைத் தொடர்ந்து பப்ஜியும் அன்றாட வாழ்வில் இணைந்துவிட்டது. சிலர் ஸ்டோரேஜ் இல்லாததால் பப்ஜிக்காக மட்டும் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இது சிறிது சிரிப்பாக இருந்தாலும் வருங்காலங்களில் இதனைப் பற்றிய சிந்திப்பு கண்டிப்பாக வேண்டும்.
இதை ஒரு விளையாட்டாக மட்டும் பார்த்தால் வினையில் இருந்து தப்பலாம