இந்திய மக்களையும்  வரலாற்றையும் ஒருசேர பாதுகாக்கும் மத்திய அரசை விமர்சிப்பது அறிவீனத்தின் உச்சம் என திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் கணேஷ் பதிலடி

இந்திய மக்களையும்  வரலாற்றையும் ஒருசேர பாதுகாக்கும் மத்திய அரசை விமர்சிப்பது அறிவீனத்தின் உச்சம் என திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் கணேஷ் பதிலடி

இந்திய வரலாற்றில் இத்தனை காலங்களில் மக்களுக்காக செயல்பட்ட ஒரு அரசை இவ்வாறு குற்றம்சாட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு செயலாகும். பட்டேல் சிலை குறித்து கேள்வி எழுப்பிய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு  திருச்சி தேசிய பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் கணேஷ்  அளித்துள்ள பதில்கள், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவருக்கு சிலை வைத்ததை கூட தவறாக பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் எதிர்க் கட்சியினரும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் மற்ற  தரப்பினரும் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர்.

 இந்த சிலை வைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் மத்திய அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று குறை  கூறும் கம்யூனிஸ்டு கட்சியினரோ   சன் குழுமமோ தயாநிதி மாறன் ,கலாநிதி மாறனனோ யாரும்  இதுவரை ஏன் எவ்வித உதவியும் செய்ய முன்வரவில்லை.

 மக்களுக்கு நல்லது செய்வதையெல்லாம்  காட்டாமல் ஊடகங்களும் இவர்கள் பின்னால் இருந்து கொண்டு மத்திய அரசை குறை சொல்வதை மட்டுமே நோக்கமாக செயல்பட்டு வருகின்றனர். 

உத்தரகண்ட் மாநிலத்தில் கும்பமேளா நடைபெறவில்லை என்று நான் கூறவில்லை.
 ஆனால், அதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள் என்பதற்கான சான்றுகளோ  வீடியோ காட்சிகளையோ வெளியிடப்படவில்லை இதிலிருந்தே இந்த ஊடகங்கள் மத்திய அரசுக்கு எதிராகத்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதற்கு வேறொரு உதாரணம் தேவைப்படுவதில்லை. 
டெல்லியில் மக்கள் நடு சாலையில் போட்டு எரித்துக் கொண்டிருக்கின்றார்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கிறது என்று குறை சொல்லும் ஒரு பிரிவினர் நாங்கள் அதனை சரிசெய்வதற்காக எடுக்கும் முயற்சிகளை மட்டும் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
சிலைகள் தேவையில்லை அனாவசியமானது என்றால் கொச்சினில் அத்தனை பெரிய ஸ்டேடியம்  எதற்காக?  மக்களுக்காக வாழ்பவர்கள்   ஸ்டேடியம் எதற்காய் அமைத்ததார்கள்.


   கேள்வி கேட்க வேண்டும் என்றால் ஆயிரம் கேள்விகள் கேட்கலாம் ஆனால் இப்பொழுது நம்முடைய எல்லோருடைய நோக்கமும் மக்களைப் பாதுகாப்பதில் தான் இருக்கின்றது. ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடாமல் இதுபோன்ற தேவையற்ற செயல்கள் மத்திய அரசை குறை கூறுவதற்காக செய்வதெல்லாம் மத்திய அரசை ஒருபோதும் பாதிக்காது என்று கூறியுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF