கள்ளிக்குடி மார்க்கெட்டை வேறு பயன்பாட்டிற்காக மாற்றியமைக்க ஆலோசனை - அமைச்சர் பேட்டி

கள்ளிக்குடி மார்க்கெட்டை வேறு பயன்பாட்டிற்காக மாற்றியமைக்க ஆலோசனை - அமைச்சர் பேட்டி

திருச்சியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட சத்திரம் பேருந்துநிலைய கட்டுமாணப்பணியானது தற்போது நிறைவுறும் தருவாயில் உள்ளதுடன், வருகிற 30ம்தேதி முதலமைச்சர் இதனை திறந்துவைக்க உள்ளார். இந்நிலையில் சத்திரம் பேருந்துநிலைய கட்டுமானப் பணிகளை நகர்புற வளர்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர. பணிகளை விரைந்து முடித்திடவும் ஒப்பந்தக்காரர்களிடம் தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில்... தனியார் பேருந்து நடத்துனர், ஓட்டுநர்களுக்கு குளித்து, இளைப்பாறிச் செல்ல கட்டணத்துடன் கூடிய ஓய்வுஅறை ஏற்பாடு செய்யப்படும் என்றும், சமயபுரம் அடுத்த எம்.ஆர்.பாளையம் பகுதியில் வனவிலங்குகள் சரணாலயம் அமைக்க ஓராண்டு காலக்கெடுக்குள் முடிக்கப்படும், திருச்சியில் நடைபெறும் அரசு மற்றும ஏனைய கட்டுமாணப்பணிகளில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதை தடுக்க ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார்.

தமிழக முதல்வர் 30ம்தேதி ஸ்டாலின் வருகை தரவுள்ளார் 400 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்துநிலையத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளார். நாளைமறுதினம் அரசாணை வெளியிடப்படவுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டைப்போன்று மொத்த, சில்லறை மார்க்கெட் போல அமையவுள்ளது. அண்ணாசிலை முதல் குடமுருட்டி வரை உயர்மட்ட பாலமும் விரைவில் அமையவுள்ளது.

ஜங்சன் வரையிலும் இதனை மாற்றி அமைக்க கேட்டுள்ளதாக தெரிவித்தார். கள்ளிக்குடியில் ஏற்கனவே கட்டப்பட்ட மார்க்கெட்டை வேறு பயன்பாட்டிற்காக மாற்றியமைக்க வல்லுனர்கள் குழுவினரின் ஆலோசனை பெற்று பயன்படுத்தப்படும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn