ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு அவலநிலை - நடவடிக்கை எடுக்குமா திருச்சி மாநகராட்சி

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு அவலநிலை - நடவடிக்கை எடுக்குமா திருச்சி மாநகராட்சி

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும் பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் திருச்சி மாவட்டத்திற்கு அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் இக்கோயில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் இந்நிலையில் ஆசியாவின் மிக நீளமான கோபுரமாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு குப்பைகள் கொட்டி குப்பை மேடாக காட்சியளிக்கிறது.

இதுமட்டுமின்றி துர்நாற்றம் வீசி வருவதால் பகுதியை கடக்கும் பொது மக்கள் பக்தர்கள் முகம் சுளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி குப்பை மேடாக மாறி வருகிறது. தற்பொழுது ஒரு நாள் காலகட்டத்தில் டெங்கு பரவி வரும் நிலையில் இதனை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக குப்பைகளை அகற்றி அப்பகுதியை தூய்மைப்படுத்த வேண்டும்.

மேலும் இனி வரும் நாட்களில் அப்பகுதியில் குப்பை கொட்ட மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn