ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு - காணொளி மூலம் விவசாயிகளுடன் கலந்துரையாடிய முதல்வர்!

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு -   காணொளி மூலம் விவசாயிகளுடன்  கலந்துரையாடிய முதல்வர்!

ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் தொடங்கி ஆறு மாதத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கி மின்வாரியம் சாதனை படைத்ததை தொடர்ந்து சென்னை https://youtu.be/ZJPUnp5TT98

அண்ணா சாலையில் உள்ள மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் 2003 முதல் 2013 வரை 10 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கக் கோரி பதிவு செய்து காத்திருந்த ஒரு லட்சம் மின் இணைப்பு திட்டத்தின் கீழ் மின்சாரம் பெற்ற விவசாயிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி மூலம் இன்று (ஏப்ரல் 16) கலந்துரையாடினார்.

இதனையொட்டி திருச்சிராப்பள்ளி மன்னார்புரம் , காஜா நகர் வி.எஸ்.எம். மஹாலில் நடைபெற்ற மாண்புமிகு முதல்வர் அவர்களின் விழா நிகழ்வு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே .என் .நேரு பங்கேற்றார். இந்நிகழ்வில் மேயர் மு. அன்பழகன் , ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம். பழனியாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு).இரா அபிராமி, மாவட்டப் பிரமுகர் க.வைரமணி, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக தலைமைப் பொறியாளர் அருள்மொழி மேற்பார்வைப் பொறியாளர் வீரமுத்து மற்றும் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் மின் வாரியப் பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ஒரு இலட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 3115 பேர் உள்பட திருச்சிராப்பள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 672 விவசாயிகள் இலவச மின் இணைப்பினைப் பெற்று பயன் பெற்றுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO