பணியில் இருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்
திருச்சி மாவட்டம், மேல கல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (58). இவர் சமயபுரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த இவர், நேற்று இரவு திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென மூர்த்திக்கு தலைசுற்றல் ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருடன் பணியாற்றிய சக போலீசார், வாடகை ஆட்டோவில் மூர்த்தியை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்ந்துள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூர்த்தி சிறிது நேரத்தில் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் திருச்சி மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision