திருச்சியில் நாளை (09.12.2024) போட்டி தேர்விற்கான மாதிரிதேர்வு

திருச்சியில் நாளை (09.12.2024) போட்டி தேர்விற்கான மாதிரிதேர்வு

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் என். ஆர்.ஐ. ஏ. எஸ். அகாடமி மற்றும் ரோட்டரி பீனிக்ஸ் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பி எஸ்சி குரூப் ii-A, குரூப்- IV போட்டித் தேர்விற்கான மாதிரிதேர்வு நாளை (09.12.2024) (திங்கட்கிழமை ) காலை 10:00 முதல் 1:30 வரை மாவட்ட மைய நூலகத்தில் நடை பெற உள்ளது. 

குரூப்- IV க்கான மாதிரி தேர்வில் 12ம் வகுப்பு அரசியல் அறிவியல் (இந்தியா, தமிழ்நாடு முக்கியத்துவம்) டிச.2024 நடப்பு நிகழ்வுகள், கணிதத்தில் பரப்பளவு ஆகியவற்றிலிருந்து வினாக் கள் இடம் பெறும். இத்தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. மாதிரி தேர்வு காலை 10 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும்.

மாணவர்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம். ஆர். விடைத்தாளில் பதிலளிக்கும் முறை யில் தேர்வு நடைபெறும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி ii-A. குரூப்-4 தேர்விற்கு தயார் செய்யும் மாணவ, மாணவிகள் தேர்வில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision