டாட்டா சுமோ காரில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவர் கைது - 800 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல்.

திருச்சி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் ஷ்யாமலா தேவி உத்தரவின் பேரில் காவல்துறை கண்காணிப்பாளர் வின்சன்ட் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் அரங்கநாதன் உதவி ஆய்வாளர் மற்றும் தனிப்பட்ட மணப்பாறை பகுதியில் ரேஷன் அரிசி உணவு பொருட்கள் கடத்தல் நடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் மணப்பாறை தெலுங்கு பட்டி கொட்டப்பட்டி வீரப்பூர் சின்ன ரெட்டிபட்டி நல்லாம்பள்ளி பகுதிகளில் ஒன்று வந்து கொண்டிருந்தபோது மணப்பாறையில் இருந்து தரகம்பட்டி செல்லும் வழியில் பூசாரிபட்டி என்ற இடத்தில் அந்த வழியாக வந்த டாடா சுமோ வாகனத்தை வழிமறித்த போது காரில் இருந்த இரண்டு நபர்கள் காவல்துறையினரை பார்த்து தப்பி ஓடினர்.
அவர்களை பிடித்து விசாரித்த போது கரூர் மாவட்டம் இரும்பு ஊதி பட்டியைச் சேர்ந்த ரவீந்திரநாத் மணப்பாறை அடுத்த கரும்புள்ளி பட்டியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் ஆகியோர் வாகனத்தில் ரேஷன் அரிசியை 16 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் சுமார் 800 கிலோ கடத்தி வந்தது கண்டறியப்பட்டது,
இதனை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனர், மேலும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நீதிமன்ற உத்தரவுபடி திருச்சி மத்தியா சிறையில் அடைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision