திருச்சியில் நாளை (10.12.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
திருச்சி மாவட்டம் மணிகண்டம் துணை மின்நிலையத்தில் நாளை (10.12.2024) (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் தென்றல் நகர், முடிகண்டம், நேருஜி நகர், மலர் நகர், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர்,
தீரன்மாநகர், மாத்தூர், ஏசனப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என்று திருச்சி மன்னார்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை, சிறுகமணி, அளுந்தூர் ஆகிய துணை மின்நி லையங்களில் நாளை (10.12.2014) (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே பெட்டவாய்த்தலை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பெட்டவாய்த்தலை, பழங்காவேரி, பழையூர்மேடு, தேவஸ்தானம், நங்கவரம்,
கோட்டையர்தோட்டம், குமாரமங்கலம், குளித்தலை, பொய்யாமணி, நச்சலூர், தளிஞ்சி, சிறுகாடு, சங்கிலியாண்டபுரம், எஸ். புதுக்கோட்டை,சோழவந்தான் தோப்பு, திருமுருகன்நகர், காந்திபுரம், இனுங்கூர், சுக்காம்பட்டி, பாதிவயல்காடு, மாடுவிளுந்தான்பாறை, எஸ். கவுண்டம்பட்டி, குறிச்சி, பாறைப் பட்டி, பங்களாபுதூர், கணேசபுரம், நடைபாலம், பணிக்கம்பட்டி ஆகிய இடங்களிலும்,
சிறுகமணி துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட வள்ளுவர் நகர், காமநாயக்கன்பாளையம், காவல்காரன் பாளையம், சிறுகமணி, பெருகமணி, அந்தநல்லூர், ஜீயபுரம் மெயின்ரோடு, அணலை, திருப்பராய்த்துறை, எலமனூர், கொடியாலயம், அம்மன்குடி, முக்கொம்பு ஆகிய பகுதிகளிலும், அளுந்தூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட அளுந்தூர்,
சேதுராப்பட்டி, பாத்திமாநகர், சூறாவளிபட்டி, குஜிலியம்பட்டி, யாகப்புடையான்பட்டி, கொட்டப்பட்டு, குமரப் பட்டி, களிமங்கலம், குன்னத்தூர், பிடாரம்பட்டி, சூரகுடிபட்டி, அம்மன் ஸ்டீல், இ.மேட்டுப்பட்டி, மேலபச்சகுடி, அரசு கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, ஐ.ஐ.ஐ.டி, பள்ளப்பட்டி, இனாம்குளத்தூர்,
புதுக்குளம், சின்னாளம்பட்டி, தோப்புப்பட்டி ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று திருச்சி கிழக்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம்.கணேசன் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision