திருச்சியில் கடத்தப்பட்ட செம்மரம் கட்டைகள் பறிமுதல்

திருச்சியில் கடத்தப்பட்ட செம்மரம் கட்டைகள் பறிமுதல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம். மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (21.12.2024)- தேதி இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் மரக்கட்டைகளை இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் 9487464651 என்ற உதவி எண்ணிற்கு கிடைத்த இரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார், உத்தரவின் பேரில், மண்ணச்சநல்லூர் காவல் நிலைய காவல் அலுவலர்கள் அய்யம்பாளையம் திருவள்ளரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது. TN 48 T 3324 TVS XL Heavy Duty என்ற இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மரக்கட்டைகளை எடுத்து வந்துள்ளனர். 

அப்போது காவலர்களை பார்த்ததும் வாகனத்தையும், மரக்கட்டைகளையும் கீழே போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டனர். பின்னர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மரக்கட்டை சம்மந்தமாக விசாரணை மேற்கொண்டதில், மேற்படி மரக்கட்டையானது செம்மரக்கட்டை என உறுதிசெய்யப்பட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது

மேலும், மேற்படி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, இரு சக்கர வாகனம் மற்றும் தப்பிசென்றவர்கள் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision