ரயில்வே மேம்பாலத்தின் கட்டுமான பணிகளை மேயர் பொறியாளர்களுடன் ஆய்வு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சாலைய ரோடு மற்றும் கோட்டை ஸ்டேஷன் சாலையினை இணைக்கும் வகையிலும், எதிர்கால போக்குவரத்தினை கருத்தில் கொண்டு பொதுமக்களின் நலன் கருதி இருவழி பாதையாக பாலத்தினை புதிதாக கட்டுவதற்கு மதிப்பீடு தொகை ரூபாய் 34.10 கோடி மதிப்பீட்டில் நகர் ஒரு அமைப்பு துறை கட்டமைப்பு நிதியின் கீழ் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை மாநகராட்சி மேயர் அன்பழகன், நகரப் பொறியாளர் பி.சிவபாதம், மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற மாமன்ற உறுப்பினருடன் கட்டுமான பணிகளின் வரைபடத்தை பார்வையிட்டு அதன் விவரங்களை பொறியாளர்களிடம் கேட்டு அறிந்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்கள்.
பின்னர் மேயர் அன்பழகன் கூறுகையில்.... மாரிஸ் பாலம் மாநகராட்சி மூலம் இருபுறமும் பணிகள் நடைபெற்று வருகிறது 60 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் பணிகள் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கி முடிவடைந்த உடன் மாநகராட்சிகள் பணிகள் நடைபெற்று வரும் இருபுறமும் பணிகளும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
ரயில்வே துறையில் பாலம் கட்டப்பட்டு 157 வருடங்கள் ஆகின்றதால் கனரக வாகனத்திற்கு ஏற்ற வகையில் இல்லாததாலும் இப்பாலும் பழுதடைந்துள்ள காரணத்தினாலும் ரயில்வே மேம்பாலத்தினை உயரப்படுத்தி மற்றும் அகலப்படுத்தியும் கட்டப்பட்டு வருகிறது
புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்தின் நீளம் 31.39 மீட்டர் அகலம் 20.70 மீட்டர் ஆகிறது, ரயில்வே பாலத்தின் கிழக்கு பகுதி 223.75 மீட்டர் நீளமும் ,15.61 மீட்டர் அகலமும் உடையதாகும் மேற்கு பகுதி 225 மீட்டர் நீளமும் ,15.61 மீட்டர் அகலம் உடையதாகும் சாலையினை தடுப்பு சுவர்களுடன் விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்ப பாலத்தினை இருவழி பாதையாக கட்டப்படுவதினால் மெயின் கார்ட் கேட் பகுதியில் இருந்து தில்லைநகர் தென்னூர் புத்தூர் மற்றும் உறையூர் பகுதிகளுக்கு போக்குவரத்து இடையூறு இன்றி சுலபமாக செல்ல இயலும் என மேயர் தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision