திருச்சியில் காவல் நிலையம் அருகே 13 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை

திருச்சியில் காவல் நிலையம் அருகே 13 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை

திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் பகுதியில் சுமார் 100 கடைகள் உள்ளன.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கடைகளில் நேற்று இரவு நுழைந்த மர்ம நபர்கள் எலக்ட்ரிக்கல் கடை, பிரின்டிங் பிரஸ், மோட்டார் ரீவைண்டிங், இருசக்கர பழுது நீக்கும் கடை, பேட்டரி விற்பனை கடை உள்ளிட்ட 13 கடைகளில் பூட்டுகளை உடைத்து கடையில் இருந்த பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து திருவெரும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார் கொள்ளை நடந்த கடைகளை பார்வையிட்டனர். காவல் நிலையத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலேயே 13 கடைகள் ஒரே நேரத்தில் உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுக்குறித்து பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில்... இந்த பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை 24 மணி நேரமும் செயல்படுவதாகவும், இதனால் மதுபான பிரியர்கள் வந்து செல்வதாகவும், இந்த பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காததால் எந்த நேரமும் இருட்டாக இருப்பதாகவும்,

மேலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் 10மணிக்கு மேல் யாரும்  கடை உரிமையாளர்கள் இருப்பது இல்லை இதனால் கொள்ளையர்களுக்கு இது வசதியாக போய்விட்டது. இதுபோல் ஏற்கனவே இரண்டு முறை கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாகவும் இந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா இருந்தால் இது போன்ற சம்பவம் நடக்க வாய்ப்பு இருக்காது என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn