நாங்களும் விவசாயி தான் - பாரம்பரிய நெல் நடவு செய்து அசத்திய விஐடி பல்கலை வேளாண்மை மாணவ மாணவியர்கள்

farmer university students plant agriculture rice

நாங்களும் விவசாயி தான் - பாரம்பரிய நெல் நடவு செய்து அசத்திய விஐடி  பல்கலை வேளாண்மை மாணவ மாணவியர்கள்

வேலூர் விஐடி பல்கலைக்கழக வேளாண் விரிவாக்க பேராசிரியர்  பால் மான்சிங்  வழிகாட்டுதலில்    வேளாண்மை படிப்பு  இறுதியாண்டு படிக்கும் மாணவ மாணவியர்கள் 11 பேர்  கொண்ட குழுவாக திருச்சி வந்துள்ளனர்.

  திருச்சியில் அமைந்துள்ள கிரியா சூழல் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்சார்பு விவசாய பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு கிரியா  கே.சி. சிவபாலன் மற்றும் இயற்கை விவசாயி எஸ் ஹரி கிருஷ்ணன்  ஆகியோர் தற்சார்பு வேளாண்மை,   பாரம்பரிய நெல் ரகங்கள், வேளாண் மதிப்பு கூட்டுதல்  போன்ற தொழில்நுட்ப பயிற்சிகளை அளித்தனர்.  

பயிற்சியில் கற்றுக் கொண்ட விஷயங்களைப் பற்றி மாணவி மகிழ் கூறும்பொழுது " நாங்கள் விஐடி கல்லூரியில் வேளாண்மை இறுதியாண்டு படிக்கிறோம்  ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி  கிரியா நிறுவனத்திற்கு வந்துள்ளோம்.


 இயற்கை இடுபொருள் உற்பத்தி, நஞ்சு இல்லா வேளாண்மை குறித்து புதிய செய்திகளை அறிந்து கொண்டோம்
விவசாயத்தில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அதன் தீர்வுகள் குறித்து  பல்வேறு களப்பணிகளை கிரியா நிறுவனத்துடன் இணைந்து கிராம அளவில்    மேற்கொள்கிறோம்" என்றார்.


 மாணவ மாணவியருக்கு பயிற்சி அளிக்கும் முனைவர் கே சி சிவபாலன்  "வேளாண் கல்லூரி மாணவ மாணவியர் நேரடியாக களப்பயிற்சி பெறுவது  நல்ல விஷயம்.  பாடத்தில் படிப்பதை விட நேரில் பார்க்கும்போது   
விவசாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை முழுமையாக புரிந்து கொள்ள  உதவும்.


விவசாயத்தில்  செலவினத்தைக் குறைக்க இயற்கை விவசாயம் செய்வது முக்கியம். குறிப்பாக பாரம்பரிய நெல் வகைகளை சாகுபடி செய்யும் போது பூச்சி மற்றும் நோய்   தாக்குதல் பெரிய அளவில் இருக்காது இருந்தாலும் பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் குறைவாகவே உள்ளனர் .எனவே பாரம்பரிய நெல் வகைகளை  விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்ய வேண்டும்"  என்றார். 


 பின்னர் மணச்சநல்லூர் வட்டம்   பெரகம்பி  அருகே கிரியா பண்ணையில் பாரம்பரிய நெல் வகைகள் குறித்த செயல் விளக்கம்  விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது   பாரம்பரிய நெல் வகையான தூயமல்லி   நெல் நடவை நடவு நடும் பெண்களுடன்   வி ஐ டி மாணவ   மாணவிகள் பிரதீபா ஜனனி சுஜிதா , சௌமியா, ஆனந்தி, மகிழ்,ஹரிணி,  ரேஷ்மா  மற்றும் மாணவர்கள் சஞ்சய், சூர்யா, கவின் இணைந்து மேற்கொண்டனர்.

  கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள்   சேற்றில் இறங்கி  நடவு  செய்ததை உள்ளூர் நடவு செய்யும் பெண்கள் ஆச்சரியத்துடன்  பார்த்து ரசித்தனர். 

வேளாண்மையில் இளைஞர்கள் இறங்கி சாதிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளது.  தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்கள் மூலம்  வேளாண் பணி ஆட்கள் தட்டுப்பாட்டை குறைக்க முடியும்,   ஊட்டச்சத்து மேலாண்மை பூச்சி நோய் மேலாண்மை  ஆகிய  பணிகளை திறம்பட செய்ய முடியும்.  அந்த வகையில் விவசாயத்தில் இளைய தலைமுறை   இறங்கி  அசத்துவது வரவேற்கத்தக்கது .

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

அறிய... 

https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision