மறைந்த முன்னாள் பிரதமரின் 100வது பிறந்தநாள் - பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு தொடக்கம்

மறைந்த முன்னாள் பிரதமரின் 100வது பிறந்தநாள் - பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு தொடக்கம்

மறைந்த முன்னாள் பிரதமா் அடல்பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாரதிய ஜனதாகட்சி பீமநகர் மண்டல் சார்பில் பீமநகர் செடல்மாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்ற வாஜ்பாய் பிறந்தநாள் விழாவில், பாரதியஜனதாகட்சி கொடி ஏற்றப்பட்டு வாஜ்பாய் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டத்துடன், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்தநிகழ்வில் பாரதீய ஜனதாகட்சி மாநில பொதுச்செயலாளர் கௌதமன் நாகராஜன், பீமநகர் மண்டல்தலைவர் குருராஜன், இளைஞரணி மாவட்டத்தலைவர் புருஷோத்தமன், கிளைத் தலைவர் மணிமேகலை, ராதாநிரஞ்சனி, மாரிமுத்து, துரைராஜ், சரவணன், பொன்ரமேஷ், ராமகிருஷ்ணன், தலைமை தபால்நிலைய மக்கள்தொடர்பு ஆய்வாளர் ஜம்புநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இன்றையதினம், செல்வமகள் சேமிப்புதிட்டத்தின்கீழ் 50 பெண் குழந்தைகளுக்கு, சேமிப்புகணக்கு தொடங்கப்பட்டு அதற்கான வங்கி புத்தகம் வழங்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision