தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்

தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்

மணப்பாறை நகராட்சியில் பணிபுரியும் திருச்சி மாவட்ட உள்ளாச்சி தொழிலாளர்கள் ஏ.ஐ.டி.யூ.சி. சங்க தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த பணியாளர்கள் பதினைந்து பேரை வேலை நிறுத்தம் செய்ததை கைவிடவும் நிரந்தர பணியாளர்களுக்கு கூடுதல் பணிசுமை ஏற்படுத்துவதை கைவிடவும் குப்பைகளை எடைபோட்டு வங்கும் முறையை கைவிட வலியுறுத்தி உள்ளியிருப்பு வேலை  நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 நகராட்சியில் சுமார் 96 பேர் நிரந்தர பணியாளர்கள் இருக்க வேண்டும் ஆனால் 64 பேர் மட்டும் நிரந்தர பணியாளர்கள் உள்ளனர்ஒப்பந்த பணியாளர்கள் என்று 107 பேரில்  இதில் பதினைந்து பேரை வேலை நிறுத்தம் செய்ய தனியார் ஒப்பந்தம் முடிவு எடுத்து உள்ள நிலையில்

 இதனால் அணைத்து தொழிலாளர்களுக்கும் கூடுதல் பணி சுமை ஏற்படுவதை நிர்வாகம் கைவிடவும்  குப்பைகளை எடைபோட்டு வங்கும் முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்ட தகவல் அறிந்து  நகர்மன்ற தலைவர் கீதா ஆ மைக்கேல ராஜ், சுகாதாரத் பணி எஸ். ஒ. ஆய்வாளர்கள் விரைந்து வந்து சங்க தலைவர் இந்திரஜித் ஜனசக்தி உசேன் சுப்ரமணியன் மற்றும் சங்க நிர்வாகிகளுடன் போச்சு வார்த்தை நடத்தினார்

 ஒப்பந்த பணியாளர்கள் யாரையும் நிறுத்துவது இல்லை அனைவரும் பணி செய்ய அனுமதிப்பது ஒருவாரத்திற்குள்  ஒப்பந்தம் எடுத்து உள்ள நிறுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவுகள்  ஏற்பட நடவடிக்கை எடுப்பது என்று தெரிவித்ததை தொடந்து இரண்டு மணி நேர உள்ளிருப்பு வேலை நிறுத்த

போராட்டத்தைதற்காலிகமாக கைவிட்டு பணிக்கு சென்றனர்

 

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn