காவல்துறை பணி போர்க்களத்தில் பணிபுரிவது போல் உள்ளதாக தமிழக டிஜிபி திருச்சியில் பேச்சு

காவல்துறை பணி போர்க்களத்தில் பணிபுரிவது போல் உள்ளதாக தமிழக டிஜிபி திருச்சியில் பேச்சு

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் மற்றும் திருச்சி மாநகர காவலர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு 600 மனுக்களை பெற்றார். முன்னதாக தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு பேசுகையில்... தமிழக முதலமைச்சரின் உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ்  38 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 7 ஆணையரகங்களில் காவல் துணை ஆணையர்களால் 5236 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன.

அவர்களால் தீர்க்கப்படாத மக்கள் 11 சரக காவல்துறை துணைத் தலைவர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களால் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன. கடந்த 8ஆம் தேதி சென்னை மாநகர காவலர்கள் 848 மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவலர் பூமிநாதன் நினைவு கூர்ந்து குற்றவாளிகளைப் பிடிக்க தன் உயிரை துச்சமென நினைத்து பணியில் ஈடுபட்டார். காவல்துறை பணி மிகவும் பெரிய சவாலானது. இதற்கு காவலர் பூமிநாதன்ஓர் எடுத்துக்காட்டு. காவல்துறையில் வாரம் ஒருநாள் விடுமுறை என்பது பேச்சில் மட்டும் இருந்தது. ஆனால் தற்போது ஐந்து நாட்கள் வேலை, ஆறாவது நாள் பணிபுரிந்தால் சிறப்பு ஊதியம், ஏழாவது நாள் விடுமுறை நடைமுறைப்படுத்த சட்டத்திருத்தம் செய்து அதற்கான பலன் தற்போது கிடைத்துள்ளது. மேலும் தெற்கு மண்டலத்திற்கு சென்று காவலர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

வருகிற 18-ஆம் தேதி மேற்கு மண்டலத்தில் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாக 1340 மனுக்கள் கடந்த ஜூலை மாதம் முதல் நவம்பர் 2021 வரை காவலர்கள் மற்றும் அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்டன இதில் 1058 கருணை மனுக்கள் அவற்றை 366 மனுக்கள் மீது தண்டனையை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

50 பேர் பணிக்கு திரும்ப எடுக்கப்பட்ட இருக்கிறார்கள். 64 பேரின் தண்டனை குறைக்கப் பட்டிருக்கிறது. மேலும் உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மாவட்ட மண்டல அளவில் காவலர்கள் குறைகள் கேட்கப்பட்டு காவல்துறை தலைமை இயக்குனர்  மனுக்களை பரிசீலனை செய்து 1353 காவலர்களுக்கு அவர்களின் விருப்பப்படி சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளதுகாவல்துறை தலைமை இயக்குனர் மூலம் தீர்வு காணப்படாத காவலர்கள் உடைய புகார் மனுக்கள் முதலமைச்சரிடம் நேரடியாக சமர்ப்பிக்கப்பட உள்ளது. காவலர்களின் மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சி திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், திருச்சி மாநகர காவல் ஆணையர்   கார்த்திகேயன்,திருச்சி சரக டிஐஜி சரவணன் சுந்தர், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார், தஞ்சை மாவட்ட டிஐஜி பிரவேஸ் குமார் உடனிந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn