தானியங்கி எந்திரங்கள் மூலம் ரூபாய் 8 கோடிக்கு முன்பதிவில்லா டிக்கெட் விற்பனை

தானியங்கி எந்திரங்கள் மூலம் ரூபாய் 8 கோடிக்கு முன்பதிவில்லா டிக்கெட் விற்பனை

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் பசுமையை நோக்கிய பயணத்தில் காகிதம் இல்லாத டிக்கெட் நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் முன்பதிவு இல்லா டிக்கெட்டுகளை யு.டி.எஸ் எனும் செல்போன் செயலி மூலம் பெற்றுக்கொள்ளும் முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

எனவே யு.டி.எஸ் செயலியை செல்போனில் நிறுவிக்கொண்டால் அதன் மூலம் முன்பதிவு இல்லா ரெயில் டிக்கெட், சீசன் டிக்கெட், பிளாட் பாரம் டிக்கெட், சீசன் டிக்கெட் புதுப்பித்தல் உள்ளிட்ட வசதியை சில விநாடிகளில் செய்து கொள்ள முடியும். ரெயில் நிலையத்தில் இருந்து 15 மீட்டர் தொலைவிலும், 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருந்து இந்த செயலி மூலம் டிக்கெட்டுகளை பெற முடியும்.

ரெயில் நிலையங்களில் உள்ள 'க்யூ ஆர் கோடு' ஸ்கேன் செய்தும் டிக்கெட்டுகளை பெற முடியும். ஆனால் ரெயில் நிலையத்தில் இருந்தபடியே இந்த செயலி மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை பெற முடியாது. புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் பயணிகள் டிக்கெட் கவுண்ட்டர்களில் இனி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. வால்ட வங்கி கணக்கு உள்ளிட்டவைகளை கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.

திருச்சி கோட்டத்தில், கடந்த  ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் வரையிலான 10 மாதங்களிலான காலப்பகுதியில் யு.டி.எஸ் செல்போன் செயலி மூலம் 99 ஆயிரத்து 235 முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு ரூ.98 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் 4 லட்சத்து 32 ஆயிரத்து 515 பயணிகள் பயனடைந்துள்ளனர். 

இதேபோல் திருச்சி கோட்டத்தில் திருச்சி, தஞ்சை ரெயில் நிலையங்களில் தலா 2 ஏ.டி.வி.எம் எந்திரங்கள் கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை ரெயில் நிலையங்களில் தலா 1 ஏ.டி.வி.எம் எந்திரங்கள் என்று 7 தனியங்கி டிக்கெட் விற்பனை எந்திரங்கள் ஏ.டி.வி.எம் உள்ளன. விரைவில் கூடுதலாக 12 ஏ.டி.வி.எம் எந்திரங்கள் நிறுவப்பட உள்ளன.

திருச்சி கோட்டத்தில் உள்ள 7 ஏ.டி.வி.எம் எந்திரங்கள் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் வரையிலான 10 மாதங்களில் 14 லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் 8 லட்சத்து 9 ஆயிரம் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை பெற்றுள்ளனர். இதன் மூலம் ரூ.8 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. என்று திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். வினோத் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn