பூங்காவில் சமூக விரோத செயல்கள் - மேயரிடம் மனு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 9 வது வார்டில் அமைந்துள்ள P.T ராஜன் பூங்காவில் மாலை நேரங்களில் போதைப் பொருள் பயன்படுத்துதல் மற்றும் சமூக விரோத செயல்கள் நடந்து வரும் நிலையில் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும் பூங்காவிற்கு விளையாட வரும் குழந்தைகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
மேலும் SMS பள்ளி அருகில் உள்ள சாலையில் பேருந்து மற்றும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட பள்ளி அருகில் வேக தடை அமைத்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
9 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள காய்கறி சந்தையில் மீன் மற்றும் இறைச்சி விற்பனை நிலையம் உள்ளது. மீன் மற்றும் இறைச்சியில் இருந்து வரும் கழிவுகளை அருகிலேயே பல நாட்களாக குவித்து வைத்துள்ளனர். இதனால் சந்தைக்கு வரும் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக கழிவுகள் மற்றும் இறைச்சிக்கு பயன்படுத்தும் சாதனங்களை அப்புறப்படுத்தி சுகாதாரமான சூழ்நிலையை பொதுமக்களுக்கு உருவாக்கி தர வேண்டும்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் சாலையில் அமைந்துள்ள பாதாள சாக்கடை மூடிகள் அனைத்தும் மிகவும் மோசமான நிலையில் உடைந்தும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் வாகன ஓட்டிகளுக்கு காயங்களும் ஏற்பட்டு வருகிறது. ஆகவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்து தர வேண்டும்.
மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சூரிய ஒளி மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அதில் பெரும் பகுதி மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. ஆகவே அவை அனைத்தையும் உடனடியாக சரி செய்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வெளிச்சம் தருமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மேற்குப் பகுதி குழுவின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision