அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் 2024 ஆம் ஆண்டின் சேர்க்கையில் காலியிடங்கள் உள்ள தொழிற்பிரிவுகளில் சேர நேரடி சேர்க்கை (spot Admission) (01.07.2024) முதல் ( 15.07.2024) வரை நடைபெற உள்ளது.

இந்த நேரடி சேர்க்கைக்கு வரும் பொழுது கைபேசி, E-mail Id, ஆதார் எண், மதிப்பெண் சான்றிதழ் (அசல்), மாற்றுச் சான்றிதழ் (அசல்), சாதி சான்றிதழ் (அசல்) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் சேர்க்கைக் கட்டணம், ஓர் ஆண்டு பிரிவு ரூ.235/- (185+50 விண்ணப்பக் கட்டணம்) மற்றும் இரண்டு ஆண்டு பிரிவு ரூ.245/- (195 +50 விண்ணப்பக் கட்டணம்) செலுத்த வேண்டும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, பஸ்பாஸ், மாதாந்திர உதவித்தொகை ரூ.750/- வழங்கப்படும். மேலும் அரசு பள்ளியில் பயின்ற பெண் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பின் Campus Interview மூலம் வேலை பெற்றுத் தரப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும்.

ஒவ்வொரு நாளும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்பதால் உடனடியாக பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகவலுக்கு 8667204376 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision