திருச்சியில் போக்குவரத்து மாற்றம் - போராட்டம்

திருச்சியில் போக்குவரத்து மாற்றம் -  போராட்டம்

வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியம் அகவிலைப்படி உயர்வு மற்றும் ஓய்வு காலப்பண பயன்களை வழங்க வேண்டும்,

2023க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை 100% பூர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் CITU, AITUC, TTSF, INTUC, HMS, AALLF, MLF, DWU மற்றும் ஓய்வூதியர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் தொடர் முழக்கப் போராட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிட் மண்டல தலைமை அலுவலகம்

 முன்பு காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில், 1000த்திற்க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்திற்கு நாகை, கும்பகோணம், திருச்சி, கரூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய.... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision