இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு திருச்சி 9 சட்டமன்ற தொகுதியில் பெண் வாக்காளர்கள் அதிகம் -ஆட்சியர் பேட்டி

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு திருச்சி 9 சட்டமன்ற தொகுதியில் பெண் வாக்காளர்கள் அதிகம் -ஆட்சியர் பேட்டி


திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில்,
 மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி  வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்   அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில்  வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளருக்கு பேட்டியளித்த ஆட்சியர் பிரதீப் குமார்.....
 ஒன்பது சட்டமன்ற தொகுதியில் 23 லட்சத்து 10413 வாக்காளர்கள் உள்ளனர் .ஆண்கள்(1120158) பதினோரு லட்சத்து 20158 பேரும் பெண்கள்(1189933) 11 லட்சத்து 89 ஆயிரத்து 933 பேரும் உள்ளனர். இன்றைய தேதியில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2544. அதிகமான வாக்காளர்கள் கொண்ட தொகுதி ஸ்ரீரங்கம் 3,01,659 குறைவான வாக்காளர் கொண்ட தொகுதி லால்குடி 2,18,971 .புதிதாக 43,423 வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட 34,288 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய ராணுவத்தில் பணிபுரியும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள் 9 சட்டமன்ற தொகுதியில் 1376 இடம்பெற்றுள்ளனர் என குறிப்பிட்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

   
#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn