The Foodiee செயலி மூலம் கொரானா நோயாளிகளுக்கு உணவு விநியோகம்

The Foodiee செயலி மூலம் கொரானா நோயாளிகளுக்கு உணவு விநியோகம்

திருச்சி மாநகர் முழுவதும் THE FOODIEE செயலி மூலம் அஜன்தன் மற்றும் சிந்துஜா தம்பதியினர் உணவு விநியோகம் செய்து வருகின்றனர். 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த செயலி உணவு விநியோகம் திருச்சி மாநகர் முழுவதும் குறுகிய காலத்திற்குள் மிகப் பிரபலமானது. இந்த செயலியின் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு உணவு விநியோகம் செய்து வருகின்றனர் இது பற்றி அஜன்தன் கூறுகையில்...

என் மனைவி சிந்துஜா தான் முதலில் இந்த செயலின் மூலம் உணவு விநியோகத்தை தொடங்கினார். அவருக்கு உறுதுணையாக இதில் பணியாற்றும் ஊழியர்களின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறேன். மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இந்த ஊரடங்கு காலத்தில் ஏதேனும் புதுமையாக செய்ய வேண்டும். அதே சமயம் மக்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக நோய்த்தொற்று உள்ளானவர்களுக்கு உணவு வழங்கலாம் என்று முடிவு செய்தோம். 

இப்போது வரை 50 நபர்களுக்கு தினந்தோறும் 4 வேளை உணவு விநியோகம் செய்து வருகின்றோம். காலை 7 முதல் 9 மணிக்குள் காலை உணவு, மதியம் 12 மணி முதல் 2 வரை இரவு நேரத்தில் அதேபோன்று 7 முதல் 8 மணிக்குள் அவர்களுக்கு உணவினை வழங்கி வருகிறோம்.

இதற்கிடையில் மாலை நேர உணவாக தேங்காய்ப்பால் கிராம்பு, கபசுர குடிநீர்,காய்கறி சூப் போன்றவற்றை வழங்கி வருகிறோம். மதிய உணவவோடு வேகவைத்த முட்டையும் வழங்கி வருகிறோம். எங்கள் நிறுவனத்தின் சார்பாக 15 நபர்கள் உணவு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி, முகக்ககவம் போன்றவற்றை கொடுத்துள்ளோம்.

அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ள பணியாளர்கள் மட்டுமே வேலை செய்து வருகிறோம். சரியான நேரத்தில் உணவு தேவைப்படுபவர்களுக்கு உணவு அளிப்பதோடு ஆரோக்கியமான உணவு வழங்குவதிலும் மிக கவனமாக இருந்து வருகிறோம். கொரனோ நோயாளிகளுக்கு உணவு வழங்கும் போது மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு செவிலியர்களின் உதவியோடு உணவினை வழங்கி விடுவோம்.


வீடுகளில் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அப்பார்ட்மெண்ட் என்றால் செக்கியூரிட்டியிடமும், தனி வீடுகளில் வசிப்பவர்களின் வாசல் சுவர்களில் வைத்துவிட்டு வருகின்றோம். எங்களோடு பணியாற்றும் உணவு விநியோகம் செய்பவர்கள் பலர் வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும், பல முன்னணி நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் வேலை செய்தவர்கள் தான். இந்த ஊரடங்கு காலத்தால் வேலை இழந்தவர்களுக்கு  முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதற்காக எங்களோடு இணைத்து  பணிப்புரிந்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx