அரசு பேருந்து நடத்துனரை அடித்து உதைத்த தனியார் பேருந்து நடத்துனர்

அரசு பேருந்து நடத்துனரை அடித்து உதைத்த தனியார் பேருந்து நடத்துனர்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இலுப்பூர் வழியாக பொன்னமராவதி செல்லும் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நின்று கொண்டிருந்தது. முன்னதாக தனியார் பேருந்து பயணிகளை ஏற்றி கொண்டு செல்ல தயாராக இருந்தது. அப்போது பயணி ஒருவர் சந்தேகத்தை கேட்க அரசு பேருந்து நடத்துனரிடம் வந்தார். இதனால் தனியார் பேருந்து நடத்தினருக்கும், அரசு பேருந்து நடத்துனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து இலுப்பூர் வழியாக பொன்னமராவதி செல்லும் அரசு பேருந்து நடத்துனர் முருகானந்த்ததை, (இஆர்எஸ்) தனியார் பேருந்து நடத்துனர் குமரேசன் தாக்கி உள்ளார். இதில் அரசு பேருந்து நடத்துனர் காயமடைந்துள்ளார். மேலும் தனியார் பேருந்து நடத்துனர் அரசு பேருந்து நடத்தினரை தகாத வார்த்தையில் திட்டி வாக்குவாதம் ஏற்பட்டு அடித்து கீழே தள்ளி விட்டுள்ளார். நடத்தினருகளுக்குள் இடையே ஏற்பட்ட சண்டையை அங்கிருந்த பயணிகள் விலக்கிவிட்டுள்ளனர்.

பின்னர் இதுக்குறித்து அரசு பேருந்து ஓட்டுனர் முருகானந்தம் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அரசு பேருந்து மத்திய பேருந்து நிலையத்தில் நின்றது. தாக்குதலுக்கு ஆளான அரசு பேருந்து நடத்துனர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே அரசு பேருந்து நடத்தினருக்கு முதுகு தண்டுவட பாதிப்பு உள்ள நிலையில், தற்போது தனியார் பேருந்து நடத்துனர் தாக்குதலால் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் தற்பொழுது அரசு பேருந்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தனியார் பேருந்து மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டு வருகிறது என கூறப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision